ஜிஎஸ்டி குறைப்பு மூலம் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒரு புரட்சி என நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜிஎஸ்டி குறைப்பு மூலம் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும் - நிர்மலா சீதாராமன் பேச்சு
Published on

சென்னை,

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பலவற்றை செய்கிறார். ஒவ்வொரு நுணுக்கத்தையும் புரிந்து கொண்டு தமிழகத்திற்கு நல்லது செய்கிறார். நாடு வளர்ச்சி அடைய பிரதமர் மோடி தொலைநோக்குடன் சிந்தித்து செயலாற்றி வருகிறார். ஜிஎஸ்டி வரியை குறைத்து நாடகம் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் இல்லை.

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒரு புரட்சி. அருண் ஜெட்லியோ, மோடியோ ஜிஎஸ்டி வரியை நிர்ணயம் செய்யவில்லை. எல்லா மாநில நிதியமைச்சர்களும் கலந்தது ஆலோசித்து எடுத்த முடிவு தான் இந்த வரி குறைப்பு நடவடிக்கை. ஜிஎஸ்டி குறைப்பு மூலம் மக்கள் கையில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும். இந்த வரி குறைப்பால் நிறைய பொருட்களை மக்கள் வாங்குவார்கள். வேலைவாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதியும் உயரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com