மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது - மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல்

மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது - மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல்
Published on

சென்னை,

மதுரை அழகப்பா நகரை சேர்ந்த தொழிலதிபர் கனக ரத்தினம் என்பவர் போலியான ரசீதுகளை சமர்ப்பித்து ஜிஎஸ்டி செலுத்தாமல் ரூ. 21 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் உறுதியானதால் தொழிலதிபர் கனக ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் கனக ரத்தினம் மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com