காவலாளி அடித்துக்கொலை; சக ஊழியர் போலீசில் சரண்

மீஞ்சூர் அருகே காவலாளி உடன் வேலை பார்த்த மற்றொரு காவலாளியை கட்டையால் அடித்து கொலை செய்தார்.
காவலாளி அடித்துக்கொலை; சக ஊழியர் போலீசில் சரண்
Published on

மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 40). இவர் காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இதைபோல பாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயா (42) என்பவரும் அதே நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு இடையே அவ்வபோது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அத்திரமடைந்த உதயா அருகே கிடந்த கட்டையை எடுத்து முரளியை தலையில் பலமாக தாக்கினார்.

தலையில் பலத்த காயமடைந்த முரளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். என்ன செய்வது என தெரியாமல் திகைத்த உதயா நேராக காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் தெரிவித்து சரணடைந்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று முரளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முரளியின் மனைவி கௌரி கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உடன் வேலை பார்த்தவரை தொழிலாளி அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com