மோட்டார்சைக்கிள் மோதி காவலாளி சாவு

மோட்டார்சைக்கிள் மோதி காவலாளி உயிரிழந்தார்.
மோட்டார்சைக்கிள் மோதி காவலாளி சாவு
Published on

திருப்புவனம்,

திருப்புவனம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 65). இவர் கழுங்குப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திருப்புவனத்தில் இருந்து சாப்பாடு வாங்கிக்கொண்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா தனியாமங்கலம் பகுதியை சேர்ந்த ஜோதிலிங்கம் (55) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த ஜோதிலிங்கம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com