ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு காவலாளி பலி

ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு காவலாளி பலியானார்.
ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு காவலாளி பலி
Published on

ஆவடி அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகர், சோழன் தெருவை சேர்ந்தவர் சிகாமணி (வயது 73). இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை இவர் வேலைக்கு செல்வதற்காக பட்டாபிராம் ரெயில் நிலையத்திற்கு செல்ல ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரெயில்வே போலீசார் உயிரிழந்த சிகாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com