கொய்யா மகசூல் குறைவு

ஆலங்குளம் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் கொய்யா மகசூல் குறைந்துள்ளது.
கொய்யா மகசூல் குறைவு
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் கொய்யா மகசூல் குறைந்துள்ளது.

ஏழைகளின் ஆப்பிள்

ஆலங்குளம் பகுதியில் மேலாண்மறைநாடு, கொங்கன்குளம், அப்பயநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 70 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் கொய்யாவை சாகுபடி செய்து உள்ளனர். இங்கு நாட்டு கொய்யா, சீனி கொய்யா, தைவான் கொய்யா, லக்னோ - 48 ஆகிய வகைகளை சேர்ந்த கொய்யா சாகுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து கொங்கன்குளத்தை சேர்ந்த விவசாயி ஜெயகுரு கூறியதாவது:-

ஆலங்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் 70 ஏக்கர் பரப்பில் கொய்யாவை சாகுபடி செய்துள்ளனர்.

விளைச்சல் குறைவு

கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்து வருகிறோம். இங்கு விளையும் கொய்யா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றது. தைவான் கொய்யா மட்டும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த ஆண்டு கொய்யாப்பழம் நல்ல விளைச்சல் அமோகமாக இருந்தது. இப்போது வெயில் அதிகமாக உள்ளதால் பழங்கள் அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனி கொய்யா மற்றும் நாட்டு கொய்யா ரூ. 25-க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். அதேபோல் தைவான் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகின்றது. விளைச்சல் குறைவாக இருப்பதால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com