“குட்கா” ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர்- டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கண்டனம்

“குட்கா” ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர்- டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
“குட்கா” ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர்- டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புகாருக்குள்ளான டி.ஜி.பி. மீதோ, அமைச்சர் மீதோ லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையால் வழக்குப்பதிவு செய்ய முடிய வில்லை.

புகாரில், வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி.க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூட முதுகெலும்பு இல்லாத துறையாக லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை மாற்றப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது .

லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை டி.ஜி.பி மற்றும் அமைச்சர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்குத் தடையாக இருப்போர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, மாநில விஜிலென்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறும் போது:-

குட்கா விவகாரத்தில் அமைச்சர் - காவல்துறை உயரதிகாரிகள் பெயரும் இடம்பெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறும் போது:-

குட்கா விவகாரத்தில் திமுகவால் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குட்கா விவகாரத்தில் 17 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பு என கூறி உள்ளார்.

காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறும் போது:-

குட்கா விவகாரத்தில் சம்பந்தபட்டவர்கள் பதவியில் இருக்கும் வரை விசாரணை நியாயமாக நடைபெறாது என கூறி உள்ளார்.

தமாகா தலைவர் வாசன் கூறும் போது :-

குட்கா விவகாரத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். தடை செய்யப்பட்ட பிறகும் கடைகளில் குட்கா எப்படி கிடைக்கிறது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com