பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வுகளுக்கு வழிகாட்டல்

தமிழக தேர்வு துறை இயக்ககம் பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது.
பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வுகளுக்கு வழிகாட்டல்
Published on

தமிழக தேர்வு துறை இயக்ககம் பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது.

செய்முறை தேர்வுகள்

இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 2022-23 பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வுகள் வரும் மார்ச் 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலான நாள்களில் நடத்தி முடிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களில் உடல் இயக்க குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களில் விருப்பத்தின் பேரில் செய்முறை தேர்வின்போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்.

மதிப்பெண்கள் பதிவேற்றம்

உடல் இயக்க குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும் செய்முறை தேர்வுக்கு பதிலாக செய்முறைதேர்வு தொடர்பான கொள்குறி கேள்விகள் வழங்கிய வினாத்தாள் வழங்கி செய்முறை தேர்வு செய்து கொள்ள செய்யலாம்.

செய்முறை தேர்வுக்கு போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இயற்பியல் பாட செய்முறை தேர்வுக்கு கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதிக்கலாம். செய்முறை தேர்வுக்கு அரசு தேர்வு துறையால் வழங்கப்பட்ட படிவத்தில் மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மதிப்பெண்களை மார்ச் 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com