போட்டி தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம்

நெல்லையில் போட்டி தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் நடந்தது.
போட்டி தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம்
Published on

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், ஜான்ஸ் கல்லூரி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. வாசகர் வட்ட துணை தலைவர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், முதன்மை நூலகர் வயலட், நூலக கண்காணிப்பாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் கலந்துகொண்டு போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் உரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் 22-வது இடம் பெற்ற நெல்லையை சார்ந்த ரமளி ராமலட்சுமி, கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், அகாடமி மேலாளர் சரவணன் ஆகியோர் பேசினர். முடிவில் நல்நூலகர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com