தமிழகத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு 15 சதவீதம் வரை உயர்வு?

மாவட்ட அளவிலான குழுக்கள் தயாரித்த இந்த புதிய வரைவு மதிப்புப் பட்டியல், தற்போது பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு 15 சதவீதம் வரை உயர்வு?
நிலங்களின் வழிகாட்டி மதிப்பு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் வீடு மற்றும் மனை விற்பனை பத்திரப்பதிவிற்கான நில வழிகாட்டி மதிப்பை15 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

10 ஆண்டுகால முரண்பாடுகள்

தமிழகத்தில் சொத்து பதிவின் போது வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே முத்திரைத்தாள் கட்டணமும், பதிவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதற்கான சர்வே எண் மற்றும் தெரு வாரியான நில மதிப்பு பட்டியலை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த வழிகாட்டி மதிப்புகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளன.

குளறுபடிகள்

இதன் காரணமாக, பல இடங்களில் சர்வே எண்களுக்கு முறையான மதிப்பு இல்லாமலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வணிக கடைகளுக்குச் சரியான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியாமலும் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன. மேலும், பெரும்பாலான இடங்களில் வணிக மதிப்பு வகைப்பாடு மாற்றம் மற்றும் சொத்து மதிப்பில் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

பொதுமக்கள் பார்வைக்கு வரைவு அறிக்கை

இந்த முரண்பாடுகளை களைந்து வழிகாட்டி மதிப்பை சீரமைக்கும் வகையில், கிராமங்கள் மற்றும் சார்பதிவக எல்லை வாரியாக புதிய வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழுக்கள் தயாரித்த இந்த புதிய வரைவு மதிப்புப் பட்டியல், தற்போது பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நில வழிகாட்டி மதிப்புகளில் உள்ள முரண்பாடுகளை முழுமையாக சரிசெய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் புதிய வழிகாட்டி மதிப்புகள், வழக்கமான மதிப்பை விட 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். இந்த வரைவு அறிக்கைக்கு மாநில மையக்குழுவின் ஒப்புதல் பெற்றவுடன், புதிய நில வழிகாட்டி மதிப்புகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்," என்று தெரிவித்தார்.

வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டால் வீடு, மனை வாங்குபவர்களுக்கான பத்திரப்பதிவு செலவு அதிகரிக்கும் என்பதால், இந்த அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பரப்பபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com