விலங்குகளுடன் இருப்பது போன்ற 3டி காட்சிகள்: கிண்டி சிறுவர் பூங்கா கட்டணம் உயர்வு; சிறுவர்களுக்கு ரூ.15 - பெரியவர்களுக்கு ரூ.50

விலங்குகளுடன் இருப்பது போன்ற 3டி காட்சிகள். சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விலங்குகளுடன் இருப்பது போன்ற 3டி காட்சிகள்: கிண்டி சிறுவர் பூங்கா கட்டணம் உயர்வு; சிறுவர்களுக்கு ரூ.15 - பெரியவர்களுக்கு ரூ.50
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் விலங்குகளின் அருகில் பார்வையாளர்களை கொண்டு செல்லும் புனை மெய்யாக்கத் தொழில்நுட்ப காட்சிக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்காவில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புலி, பென்குயின், கங்காரு, வெள்ளை பாண்டா, அனகோண்டா, டைனோசர் உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களை கொண்டு புனை மெய்யாக்கத் தொழில்நுட்ப காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

அதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள திரையரங்கத்திற்குள் நுழையும் பார்வையாளர்கள் திரையில் வன விலங்குகளுடன் தோன்றும் வகையில் ரியாலிட்டி ஷோ நடத்தப்படுகிறது. 3டி அனிமேஷன் தோற்றத்தில் விலங்குகளுடன் நம்மை காட்சிப்படுத்துகிறார்கள். விலங்குகளை தொடுவது, அதற்கு முத்தம் கொடுப்பது, விலங்குகள்மீது கை போட்டு நடந்து செல்வது என காட்டுக்குள் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை நாம் திரையில் காண முடியும்.

டைனோசர், புலி, சிறுத்தை, கரடி, கங்காரு, ஒட்டக சிவிங்கி, பென்குயின், பாண்டா கரடி, டால்பின், அனகோண்டா உள்ளிட்ட 10 விலங்குகளுடன் நாம் பயணிப்பது போல் திரையில் காட்டுவார்கள்.

இதற்கான கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கு 15 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com