தமிழகத்தில் வாழும் சவுராஷ்டிர மக்களுக்குதாய் வீடு போன்றது குஜராத்

தமிழகத்தில் வாழும் சவுராஷ்டிர மக்களுக்கு தாய் வீடு போன்றது குஜராத் என மத்திய மந்திரி மகேந்திரபாய் முன்ச்பரா கூறினார்.
தமிழகத்தில் வாழும் சவுராஷ்டிர மக்களுக்குதாய் வீடு போன்றது குஜராத்
Published on

தமிழகத்தில் வாழும் சவுராஷ்டிர மக்களுக்கு தாய் வீடு போன்றது குஜராத் என மத்திய மந்திரி மகேந்திரபாய் முன்ச்பரா கூறினார்.

சங்கமம் நிகழ்ச்சி

குஜராத் மாநில அரசின் சார்பில் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஆயுஷ் துறை இணை மந்திரி மகேந்திரபாய் முன்ச்பரா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தாய் வீடு குஜராத்

தமிழகத்தில் வாழும் சவுராஷ்டிர மக்களுக்கு, குஜராத் மாநிலம் தாய் வீடு போன்றதாகும். இசைத்துறை, வணிகத்துறை போன்றவற்றில் சவுராஷ்டிர மக்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

தமிழகம்- குஜராத் இடையேயான கலாசார உறவை மேம்படுத்தும் வகையில் குஜராத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில்கள், புராதன சின்னங்கள், சர்தார் வல்லபாய் படேல் சிலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மக்கள் பார்வையிடவும், இரு மாநிலங்கள் இடையேயான உறவை விளக்கும் வகையில் கலைப்பொருள் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நம் நாடு முன்னேற கலாசார நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, மாறுபட்ட சமூகத்தை புரிந்து கொள்ளுதல் போன்றவை அவசியமாகிறது. எனவே அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.

பட்டு-வெற்றிலை உற்பத்தி

கும்பகோணம் மாமன்னர்கள் மற்றும் வம்சங்களுடன் தொடர்புடைய தனித்துவமான வரலாறு கொண்ட மாநகரமாகும். பட்டு மற்றும் வெற்றிலை உற்பத்தியில் கும்பகோணம் முன்னணியில் உள்ளது. கும்பகோணத்தில் 80 ஆயிரம் சவுராஷ்டிரா தமிழர்கள் வசிக்கின்றனர். சவுராஷ்டிரா, இந்திய நாட்டில் பலரால் பேசப்படும் மொழியாக உள்ளது.

எனவே சவுராஷ்டிரா மற்றும் தமிழர்களின் பண்பாடு குறித்து அறிந்து கொள்ள அனைவரும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாய் வீட்டுக்கு...

நிகழ்ச்சியில் குஜராத் மாநில கல்வித்துறை அமைச்சர் பிரபுல்பன்சேரியா பேசுகையில், 'குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு சோம்நாத், துவாரகா, ராஜ்கோட் உள்ளிட்ட பகுதிகளில் சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இங்கு உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்க இங்கு வந்துள்ளேன்.

நான் கும்பகோணம் வருவதை தாய்வீட்டிற்கு வருவதாக கருதுகிறேன். இந்த சங்கமத்தால் வலுவான இந்தியாவை உருவாக்க ஒரு வாய்ப்பு ஏற்படும்' என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரோவில் மைய செயலாளர் ஜெயந்தி எஸ்.ரவி மற்றும் சவுராஷ்டிரா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com