கும்மிடிப்பூண்டி: நிலக்கரி லாரி மீது மோதல்...உள்ளேயே சிக்கி தவித்த கண்டெய்னர் ஓட்டுநர் - வீடியோ

இந்த விபத்தில் கண்டெய்னர் ஓட்டுநர் உள்ளேயே வெகு நேரமாக சிக்கி தவித்தார்.
சென்னை,
கும்மிடிப்பூண்டி அருகே நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்த கண்டெய்னர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த மோதலின் காரணத்தால் இரு லாரிகளும் வசமாக சிக்கியது. இதனால் கண்டெய்னர் ஓட்டுநர் உள்ளேயே வெகு நேரமாக சிக்கி தவித்தார்.
இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கண்டெய்னர் லாரியில் சிக்கி தவித்த ஓட்டுநரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






