தான்தோன்றீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா

தியாகதுருகம் அருகே தான்தோன்றீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா நடைபெற்றது.
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா
Published on

தியாகதுருகம்.

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சுந்தரமூர்த்தி சாமிக்கு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு கோவிலில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணிக்கு குருபூஜை நடந்தது. தொடர்ந்து 1 மணிக்கு மாதேஸ்வர பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி எழுந்தருளினார். அப்போது சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள், திருப்பணி குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com