சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை நடத்தப்பட்டது.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை
Published on

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. 12 திருமுறைகளில் ஏழாம் திருமுறை அருளியவர் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் இவரை தோழனாக ஏற்றுக் கொண்டவர் என புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சாமி கோவிலில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பால், தயிர், நெய், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் மங்கள இசையுடன் மாகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரை தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com