மேல அகத்தீஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை

மேல அகத்தீஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை நடந்தது.
மேல அகத்தீஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை
Published on

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் - விளந்தையில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோவிலில் நால்வர் குரு பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அப்பர் குரு பூஜை விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி, பிள்ளையார், முருகன், அகத்தியர் மற்றும் நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பன்னிரு திருமுறை சுமந்து தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி, ஆராதனையுடன் கூடிய குரு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com