சண்டிகேஸ்வரருக்கு குருபூஜை

சண்டிகேஸ்வரருக்கு குருபூஜை நடந்தது
சண்டிகேஸ்வரருக்கு குருபூஜை
Published on

கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சுவாமிக்கு நேற்று குருபூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு பால், தயிர் பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com