குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
Published on

மதுரை,

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 16128) இன்று முதல், 4-ந் தேதி, 8-ந் தேதி, 10-ந் தேதி, 11-ந் தேதி மற்றும் 15-ந் தேதிகளில் எர்ணாகுளம் ஜங்ஷன், சேருதலா, ஆலப்புழை வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதற்காக இந்த ரெயில் நிலையங்களில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com