ஸ்கூட்டரில் குட்கா கடத்திய முதியவர் கைது

பேரிகை அருகே பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக ஸ்கூட்டரில் குட்கா கடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்கூட்டரில் குட்கா கடத்திய முதியவர் கைது
Published on

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் தீர்த்தம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்தவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் பையில் குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர், சூளகிரி அருகே அத்திமுகத்தை சேர்ந்த ராஜகோபால் (வயது 65) என்பதும், பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து குட்கா கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குட்கா மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com