குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்

குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
Published on

சென்னை

குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் குட்கா தொடர்பாக தாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் போயஸ் கார்டனில் சசிகலா அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் டிஜிபி எழுதிய ரகசிய கடிதம் கைப்பற்றப்பட்டது. சசிகலா அறையில் சிக்கிய கடிதம் குறித்து வருமான வரித்துறை துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கமளித்துள்ளது. வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தை முதல்வருக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம் போயஸ் இல்லத்தில் சசிகலா அறையில் இருந்தது.

2016 ஏப். 1 முதல் ஜூன் 15 வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் வாக்குமூலம் அளித்ததாக பதில் மனுவில் தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது.

வருமானவரித் துறையினரின் பதில் மனுவை அடுத்து, வழக்கை வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

#GutkhaIssue #GutkhaIssue #ITRaids #Sasikala

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com