லாரியில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

சாத்தான்குளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் சாத்தான்குளம் போலீசார் இணைந்து ரோந்து சென்றனர்.
லாரியில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைகளை ஏற்றிக்கொண்டு வாகனம் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் சாத்தான்குளம் போலீசார் இணைந்து ரோந்து சென்றனர். அப்போது பேய்குளம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை போலீசார் நிறுத்திய போது, அதனை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் வாகனத்தில் இருந்தவர்கள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் லாரியில் ஏறி சோதனை நடத்திய போது, அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 450 கிலோ குட்கா புகையிலை மூட்டைகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைகள் இருந்தது. அதனை கைப்பற்றி பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com