

சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றுதான் திமுக கேட்டது . சிபிஐ விசாரணை நடத்தினாலும் மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.
குட்கா விவகாரத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை. குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.