தமிழ் மொழி இருக்கக்கூடாது என்பதற்காக திராவிடம் திணிக்கப்பட்டது: ஹெச்.ராஜா கருத்தால் மீண்டும் சலசலப்பு

தமிழ் மொழி இருக்கக்கூடாது என்பதற்காக திராவிடம் திணிக்கப்பட்டது என்று ஹெச்.ராஜா கருத்தால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. #HRaja
தமிழ் மொழி இருக்கக்கூடாது என்பதற்காக திராவிடம் திணிக்கப்பட்டது: ஹெச்.ராஜா கருத்தால் மீண்டும் சலசலப்பு
Published on

ஒட்டன் சத்திரம்,

பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பெரியார் பெயரில் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தமிழ் மொழியே இருக்க கூடாது என்பதற்காக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம். தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதால்தான் வசைபாடுகிறார்கள் என்று தெரிவித்தார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com