

சென்னை,
எச்.வசந்தகுமார் எம்.பி. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எச்.வசந்தகுமார் எப்போதும் மக்களின் நலனுக்காகவே உழைத்தார். அவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் சிறந்த தொழில்முனைவோராகவும் இருந்தார். எச்.வசந்தகுமார் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அந்த இழப்பை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவருடைய ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். எச்.வசந்தகுமாரின் இழப்பால் துயருற்று இருக்கும் அவருடைய குடும்பத்தினர், அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றும் கடவுளை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.