இன்ஸ்டாவில் பழக்கம்... கள்ளக்காதலனை திருமணம் செய்த பெண் - குழவிக்கல்லால் தாக்கிய கணவர்; குமரியில் பரபரப்பு

உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வாலிபரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
இன்ஸ்டாவில் பழக்கம்... கள்ளக்காதலனை திருமணம் செய்த பெண் - குழவிக்கல்லால் தாக்கிய கணவர்; குமரியில் பரபரப்பு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் 47 வயதுடைய தொழிலாளி. இவரது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

அந்த பெண், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மதுரைக்கு சென்று வாலிபரை அடிக்கடி சந்தித்து குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே மதுரை வாலிபருடன், அந்த பெண் திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதை பார்த்து அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்தநிலையில் மதுரைக்கு சென்ற அந்த பெண் ஒரு வாரம் கழித்து நேற்று முன்தினம் காலையில் ஆரல்வாய்மொழிக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மனைவியிடம், அவர் கள்ளக்காதல் பற்றி கேட்க அவர்களுக்கிடையே தகராறு முற்றியது.

இதில் ஆத்திரமடைந்து இஞ்சி, பூண்டு இடிக்க பயன்படுத்தப்படும் சிறிய குழவிக் கல்லால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு நெற்றி, மூக்கு, வாய் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com