அரையாண்டு விடுமுறை நிறைவு - 9 முதல் 12-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அரையாண்டு விடுமுறை நிறைவு - 9 முதல் 12-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளையொட்டி, டிசம்பர் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை 3 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதனிடையே கொரோனா தொற்று நிலவரம் குறித்து ஆய்வு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com