நாளை முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
நாளை முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை
Published on

நெல்லை,

மோசமான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்படும். அந்த பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் பள்ளிகளுடன் இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பள்ளி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறாமல் இருப்பதற்கு 13 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணம். பள்ளிக்கல்வி துறை ஆணையர் தலைமையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு விரைவில் பணி நியமனம் நடைபெறும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றவர்களுக்கு தமிழக அரசின் நிதி நிலை சரியான பிறகு தேவைக்கேற்ப பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடல் நிலை பரிசோதனை செய்தனர். அப்போது லேசான ரத்த அழுத்த பிரச்சினை இருந்ததும், அது உடனடியாக சீரானதும் தெரியவந்தது.

டாக்டர்கள் ஓய்வு எடுக்குமாறு கூறியபோதிலும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து மாணவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு, ஆய்வு கூட்டம் என தனது பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com