சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

தேர்வு தினத்தன்று தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
Published on

சென்னை,

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 தேர்வுகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனை சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு என்று சொல்லப்படுகிறது. இதில் தாள்-1 தேர்வு 222 தேர்வு மையங்களிலும், தாள்-2 தேர்வு 613 தேர்வு மையங்களில் நடக்கிறது. தாள்-1 தேர்வை பொறுத்தவரையில் 61 ஆயிரத்து 386 பேரும், தாள்-2 தேர்வை 1 லட்சத்து 67 ஆயிரத்து 743 பேரும் எழுத இருக்கின்றனர்.அவ்வாறு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு தினத்தன்று தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். வரும் போது ஹால்டிக்கெட் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள அசல் அடையாள சான்று மற்றும் 2 கருப்பு மை பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com