மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

பாபநாசம்;

பாபநாசம் ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பொறுப்பாளர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கியை வழங்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர் அன்புமணி, செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com