கள்ளக்குறிச்சியில்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர்கள் செல்வம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு நிதி குறைப்பு செய்ததை கண்டித்தும், கடுமையான ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படாததை கண்டித்தும், கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு 30 சதவீதம் நிதி குறைப்பு செய்ததை கண்டித்தும் உரையாற்றினார். இதில் ஒன்றிய தலைவர்கள் வைத்திலிங்கம், மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் சாந்தி, ஒன்றிய செயலாளர் அறிவழகன், முத்துவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் அஞ்சலை, செல்வம், சண்முகம், ராதிகா, பழனிச்சாமி உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com