மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வேலூர் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் குருமூர்த்தி, துணைத்தலைவர்கள் வீரபாண்டியன், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.ஜெ.சீனிவாசன், மாநிலதலைவர் வில்சன், மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் கோரிக்கை தொடர்பாக விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் ஒரு கடை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் சட்டப்படி கடைகள் ஒதுக்கீடு செய்யவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com