மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பழனி புதுதாராபுரம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, சுயதொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகள் வங்கி கடன் கேட்டால் நிராகரிக்கப்படுகிறது. வங்கிகளில் சாய்வுதளம் அமைக்கப்படவில்லை. முன்னுரிமை அளிக்காமல் வரிசையில் காக்க வைக்கப்படுகிறார்கள். மேற்கண்ட கோரிக்கை குறித்து வங்கி அலுவலர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com