

பழனி அரசு மருத்துவமனை முன்பு, மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர தலைவர் காளீஸ்வரி தலைமை தாங்கினார். பழனி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் கட்டிடத்தில் சாய்வுதளம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.