மாணவிகளுக்கு கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சி

பொள்ளாச்சியில் மாணவிகளுக்கு கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவிகளுக்கு கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சி
Published on

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமையொட்டி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உடல் நலம், மன நலம் குறித்த கருத்தம் நடந்தது. இதை தொடர்ந்து மாணவிகளுக்கு கைவினைபொருட்களை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தை மாணவிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தூய்மை இந்தியாவிற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் விதைபந்து தூவுதல், யோகா பயிற்சி, சாலை விதிகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, உதவி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com