குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கரூர் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

தொழிலாளி

கரூர் வெங்கமேடு பேங்க் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் ரமேசுக்கும், கோமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி, ரமேசை திட்டியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரமேஷ் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com