

சென்னை,
அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சியுடன் மற்ற பகுதிகளை இணைத்தால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. ஆவடி நகராட்சி மட்டும் தான் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5.2 லட்சம் மக்கள் தொகையுடன் 48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.
இதற்காக முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆவடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.