எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி மக்கள் சேவையில் சிறந்து விளங்க இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மதிப்பிற்குரிய அண்ணனுமான எடப்பாடி பழனிசாமிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் நீண்ட ஆயுளுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும், அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்டு தொடர்ந்து மக்கள் சேவையில் சிறந்து விளங்க இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

அவரது அரசியல் பயணம் மேலும் உயர்ந்து, மக்கள் நலப்பணிகளில் இன்னும் பல சாதனைகள் புரிய என் உளமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com