எல்.கே. அத்வானிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்

அத்வானி நீண்ட ஆயுளுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக மாநிலத்தின் பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்
எல்.கே. அத்வானி,நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

பாரத ரத்னா எல்.கே. அத்வானிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக மாநிலத்தின் பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

மூத்த அரசியல் ஆளுமை

பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவராகவும், கட்சியின் தேசிய தலைவராக பலமுறை பொறுப்பு வகித்தவராகவும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியாகவும், இந்தியாவின் முன்னாள் துணை பிரதமராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் தேசத்திற்கும், கட்சிக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய மூத்த அரசியல் ஆளுமை அவர்.

அரசியல் அனுபவம்

தனது நீண்டகால பொதுவாழ்வில் தேசப்பற்று, கொள்கை பிடிப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, பல தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழும் அவரது சேவையும், அரசியல் அனுபவமும் என்றும் போற்றத்தக்கவை.

பிரார்த்திக்கிறேன்

அவர் நீண்ட ஆயுளுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X