எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் பிறந்தநாள்....சீமான் வாழ்த்து..!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் பிறந்தநாள்....சீமான் வாழ்த்து..!
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகரக்ள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com