அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள் - அண்ணாமலை

பெண்களின் பாதுகாப்பு, கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்குத் துணை நிற்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள் - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் முன்னேற்றும் அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் சக்தி தான் சமூகத்தின் அடித்தளம். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் பெண்களின் பங்கு அளப்பரியது.

பெண் சக்தி உயர்ந்தால் தான் சமூகம் உயர்ந்ததாகும். பெண்கள் பாதுகாப்பாகவும், சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யும் சமூகத்தை உருவாக்குவோம். பெண்களின் பாதுகாப்பு, கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்குத் துணை நிற்போம்.

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com