உலக தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் - தமிழிசை சவுந்தரராஜன்


உலக தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் - தமிழிசை சவுந்தரராஜன்
x

போகி நாளன்று தீய சக்திகளை கொளுத்துவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

உலகத் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழர் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் விழா இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களைை பாதுகாக்கும் வகையில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்த விஸ்வகர்மா நிதி உதவி திட்டம்.

மண்பாண்டத் தொழிலாளர்களை நாமும் ஆதரித்து பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை,அடுப்பு வாங்கி பாரதப் பிரதமரின் விருப்பப்படி சுயசார்பான இந்தியாவை உருவாக்குவோம்.

பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

போகி நாளன்று தீய சக்திகளை கொளுத்துவோம்...

டயர்கள் கொளுத்துவதைத் தவிர்ப்போம்...

சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்...

பொங்கட்டும் இனிமை ...

தங்கட்டும் மகிழ்ச்சி...

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story