சென்னை அண்ணாநகரில் களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

சென்னை அண்ணாநகரில் இன்று ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை அண்ணாநகரில் களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி
Published on

சென்னை,

போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணாநகரில் இன்று 'போக்குவரத்து இல்லா சாலை' என்ற பெயரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருந்தன. டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளையும் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் விளையாடினர். அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஆண்களும், பெண்களும் உற்சாக நடனமாடினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com