'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் இன்று காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "U" திருப்பம் செய்து ரெயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.

* விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரெயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் U- திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com