சென்னை அண்ணாசாலை பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி... உற்சாகத்துடன் நடனமாடிய மக்கள்

நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாசாலை பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி... உற்சாகத்துடன் நடனமாடிய மக்கள்
Published on

சென்னை,

சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் மகிழ்ச்சி தெரு கொண்டாட்ட நிகழ்ச்சி, வருகிற 30-ந்தேதி மற்றும் மே 7, 14, 21-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. அன்றைய தினங்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று ஹேப்பி ஸ்ட்ரீட் இன்று நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை கலந்துகொண்டர். மேலும், இளைஞர்கள் பாடலுக்கு ஏற்ப நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com