டி 20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றதில் மகிழ்ச்சி - அன்புமணி வாழ்த்து

மூன்றாம் முறையாக கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
டி 20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றதில் மகிழ்ச்சி - அன்புமணி வாழ்த்து
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சவாலான போட்டியில் இந்த வெற்றியை சாத்தியமாக்கிய இந்திய வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

போட்டியை நடத்தும் நாடு கோப்பையை வென்றதில்லை; இதுவரை எந்த அணியும் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றதில்லை என்பதை முறியடித்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் நியுசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும்; டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று புதிய சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com