ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியது மகிழ்ச்சி- திருமாவளவன்

தொகுதியின் எம்.பி.யாகவும், மண்ணின் மைந்தனாகவும் பெருமையாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியது மகிழ்ச்சி- திருமாவளவன்
Published on

அரியலூர்,

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:-

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து வழிபாடு செய்ததுடன், ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று முதலாம் ராஜேந்திர சோழனின் சாதனை குறித்து பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது. மேலும் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைகள் தமிழகத்தில் நிறுவப்படும் என்று பேசியுள்ளது இந்த தொகுதியின் எம்.பி.யாகவும், மண்ணின் மைந்தனாகவும் பெருமையாக உள்ளது, இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com