மக்களவை சபாநாயகராக ஓம்.பிர்லா தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டி.டி.வி. தினகரன்

மக்களவை சபாநாயகராக ஓம்.பிர்லா இரண்டாவது முறையாக முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை சபாநாயகராக ஓம்.பிர்லா தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டி.டி.வி. தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

18 வது மக்களவையின் சபாநாயகராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்களின் மூலம் மக்களவையோடு மக்கள் பிரதிநிதிகளையும் சிறப்பாக வழிநடத்திச் செல்ல ஓம் பிர்லா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com