அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்

அன்னை பராசக்தியின் அருளால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், வளமும் பெருகட்டும்.
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

விஜயதசமி திருநாளை முன்னிட்டு, அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, மனநிம்மதி, வளம் பெருகவும், தமிழகத்தின் வளர்ச்சி தொடர்ந்து சிறக்கவும் வேண்டி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்து

அனைவருக்கும் இனிய விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாள், நம் வாழ்வில் புதிய தொடக்கங்களையும், வெற்றிகளையும், நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். அன்னை பராசக்தியின் அருளால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், வளமும் பெருகட்டும்.

இந்தப் புனிதத் திருநாளில், அனைவரது முயற்சிகளும் வெற்றியடையவும், இல்லங்களில் அன்பும் அமைதியும் நிலவவும், நம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com