பணம் கேட்டு தொல்லை: வி.சி.க. எம்.எல்.ஏ. மீது சபாநாயகரிடம் புகார்


பணம் கேட்டு தொல்லை: வி.சி.க. எம்.எல்.ஏ. மீது சபாநாயகரிடம் புகார்
x

திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி மீது புகார்கள் எழுந்தது.

சென்னை,

சென்னையை அடுத்த கோவளத்தில் ஏரோ டான் என்ற நிறுவனம் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஏரோ டான் நிறுவன அதிகாரிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி மீது புகார்கள் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, ஏரோ டான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிசா என்பவர், சபாநாயகர் மு.அப்பாவுவை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story