சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

வடமாநில இளைஞர் ரோஷன் என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
Published on

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் கடந்த 25ம் தேதி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி வேறு கல்லூரியில் படித்து வந்துள்ளார். ஐ.ஐ.டி.யில் படித்து வரும் தனது தோழியை பார்க்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் ரோஷன் என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வடமாநில இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. மேலும், இந்த வழக்கை நேர்மையாக குறித்த காலத்திற்குள் விசாரித்து முடிவுக்கவும் தமிழக டி.ஜி.பி.க்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com